உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரில் ஆப்கானிஸ்தான் சாம்பியன்!

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (11:00 IST)
ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

 
 
இங்கிலாந்தில் 2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று தொடர் கடந்த மாதம் ஜிம்பாப்வேயில் தொடங்கியது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிப் பெற்றன.
 
இந்நிலையில், இன்று இந்த இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 46.5 ஓவர்களில் 205 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரோவன் பவல் 44 ரன்களும், சிம்ரான் ஹெட்மியர் 38 ரன்களும் எடுத்தனர்.
 
பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 40.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முகமது ஷேசாத் 84 ரன்களும், ரஹ்மத் ஷா 51 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்