நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆர் சி பி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். ஏற்கனவே அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.
ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். இந்நிலையில் கார்த்திக் மீண்டும் ஆர் சி பி அணிக்குள் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இணைந்துள்ளார். மேலும் சில கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வந்தார்.