முதல் அணியாக உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (15:27 IST)
நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை முற்றிலும் இழந்துள்ளது.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் சூப்பர் 12 சுற்றில் நான்கு போட்டிகளில் 2ல் தோற்றும் 2-ல் மழை காரணமாக முடிவு தெரியாமலும் ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து முதல் அணியாக சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது ஆப்கானிஸ்தான்.

முக்கியமான இரண்டு போட்டிகளை மழைக் காரணமாக ஆப்கானிஸ்தான் விளையாட முடியாமல் போனதால் இந்த சோகமான முடிவு அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்