அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டது.
இது சம்மந்தமாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லஃதீப் உறுதி செய்துள்ள நிலையில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டு ம் துபாயில் நடக்கும் என்றும் மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடக்கும் என்றும் தெரிகிறது. இந்திய அணி அரையிறுதி மற்றும் தகுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் அந்த போட்டிகளும் துபாயில் நடக்கும். அப்படி இந்தியா தகுதி பெறவில்லை என்றால் அந்த போட்டிகள் லாகூரில் நடக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.