3 ஓவரில் விழுந்த 4 விக்கெட்டுக்கள்: ஆனாலும் இமாலய இலக்கு கொடுத்த இங்கிலாந்து

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (15:06 IST)
3 ஓவரில் விழுந்த 4 விக்கெட்டுக்கள்: ஆனாலும் இமாலய இலக்கு கொடுத்த இங்கிலாந்து
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் 73 ரன்களும் அலெக்ஸ் ஹேல்ஸ் 52 ரன்களும் எடுத்தனர் 
 
கடைசி 3 ஓவரில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 180 என்ற இமாலய இலக்கை நியூசிலாந்து அணிக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி இன்னும் சில நிமிடங்களில் 180 என்ற இலக்கை நோக்கி விளையாட இருக்கும் நிலையில் அந்த அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
நியூசிலாந்து அணி ஐந்து புள்ளிகள் எடுத்து ஏற்கனவே 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வென்றால் அந்த அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும். ஒரு வேளை இங்கிலாந்து அணி வென்றால் அந்த அணிக்கு 5 புள்ளிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்