தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (16:55 IST)
தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் அங்கிருந்த செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அம்மாநில அரசு அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் அங்கிருந்த செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அம்மாநில அரசு அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
 
தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் சிலர், பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமும் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. டெல்லி மத நிகழ்வில் கலந்து கொண்ட 156 தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அந்நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. “அவர்கள் சட்டங்களை பின்பற்றவும் மாட்டார்கள், அதனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். மனிதத்தின் எதிரி அவர்கள். பெண் செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டது மிகப்பெரிய குற்றம். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்