விவசாயிகள் டிராக்டர் பேரணி: 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாயம்

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (14:45 IST)
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
 
டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
 
"இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கடந்த 26-ந் தேதி அங்கு மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை மூண்டது.
 
இந்த பேரணியை தொடர்ந்து மீண்டும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த பேரணி மற்றும் வன்முறை சம்பவத்துக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
 
மேலும், இதுகுறித்து ஆய்வு செய்ய 6 பேர் குழு ஒன்றை அமைத்துள்ள விவசாயிகள், மாயமானவர்களின் விவரங்களை இந்த குழுவினர் சேகரித்து, அது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்து உள்ளது. இதைப்போல மாயமானவர்கள் பற்றி தகவல் அறிந்தால் தெரிவிப்பதற்கு அலைபேசி எண் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.
 
இதற்கிடையே விவசாயிகளின் போராட்டக்களங்களில் பொதுமக்களை அனுமதிக்காத போலீசாரின் செயலுக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது போராட்டக்காரர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை நிறுத்துவதற்கான சதி என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்