மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த குடியரசு தினம் முதலாக போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விவசாயிகள் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.