இந்நிலையில் சமீப காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக டெல்லியில் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காஸிப்புர் மற்றும் திக்ரி பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை இணையதள சேவைகளை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.