உடலுறவால் கொரோனா பரவுமா... WHO சொல்வது என்ன??

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (12:53 IST)
கொரோனா வைரஸ் உடலுறவின் மூலம் பரவுமா என  அந்தேகம் எழுந்ததற்கு WHO தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பதிலளித்துள்ளது. 
 
உலகமெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 8000 ஐ தாண்டியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் உடலுறவின் மூலம் பரவுமா என  அந்தேகம் எழுந்ததற்கு WHO தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பதிலளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, இதுவரை கொரோனா பரவுதல் குறித்து கிடைத்த தகவல்களிலிருந்து, நோய்த்தொற்று பாலினத்தினால் ஏற்பட்டதா? என்பது குறித்து தெளிவாக எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், புதிதாக வந்த தகவலின் படி வைரஸ் தாக்கப்பட்ட ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இது குறித்தும் அதிகாரப்பூர்வ ஆய்வுகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்