கொரோனா எதிரொலி: 168 ரயில் சேவைகள் ரத்து

வியாழன், 19 மார்ச் 2020 (10:36 IST)
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் 168 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரொனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகம் முழுவதிலும் 8,810 பேர் இறந்துள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அரசு கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு நாட்டு விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் பள்ளிகள், கேளிக்கை விடுதிகள், ஷாப்பிங் மால், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பயணத்தை வெகுவாக குறைத்து கொள்ள தொடங்கியுள்ளனர். இந்திய ரயில்களில் பலவற்றில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. பலர் டிக்கெட் முன்பதிவுகளை கேன்சல் செய்து கொண்டுள்ளனர். இதனால் போக்குவரத்து மிகவும் குறைந்த ரயில்சேவைகளை தற்காலிகமாக நிறுத்த இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.

அதன்படி 168 சிறப்பு ரயில்கள் மற்றும் பேசஞ்சர் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருச்சி வழியே இயங்கும் காரைக்குடி, மானாமதுரை பாசஞ்சர் ரயில்களையும் தென்னக ரயில்வே தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்