டிவி, ஸ்மார்ட்போன் மூலம் உளவு பார்த்த சி.ஐ.ஏ. விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய அம்பலம்

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (22:37 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் பல ரகசியங்களை வெளியிட்டு உலகையே அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் இன்று மீண்டும் பல முக்கிய ரகசியங்களை லீக் செய்துள்ளது.


 


அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, டிவி, ஸ்மார்ட்போனில் மென்பொருட்களை பொருத்தி அதை ஹேக் செய்துள்ள ரகசியத்தை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

நீங்கள் வீட்டில் வைத்து பயன்படுத்தும் சாம்சங் ஸ்மார்ட் டி.வி.யினை உளவு பார்க்கும் சாதனமாக மாற்ற சிஐஏ கருவி ஒன்றை வடிவமைத்துள்ளதாம். இந்த புதிய கருவி உங்களது ஸ்மார்ட் டிவி ஆஃப் ஆனதை போன்று காட்சியளிக்க செய்து உங்களது உரையாடல்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம் ஏராளமான தகவல்களை பெற்றுள்ளது சி.ஐ.ஏ .

இதேபோல் ஆப்பிள் ஐபோன்கள், கூகுள் இயங்குதளம், ஸ்மார்ட் கார் மென்பொருள் என பலவழிகளில் சி.ஐ.ஏ ஆயிரக்கணக்கான தகவல்களை திரட்டியுள்ளதாக விக்கிலீக்ஸ் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்