மத்த நாடுகளுக்கும் கொஞ்சம் தடுப்பூசி குடுங்க! – சீரம் நிறுவனத்திற்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்!

Webdunia
புதன், 19 மே 2021 (09:40 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு தடுப்பூசி வழங்கும் சீரம் நிறுவனத்திடம் மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசி தரும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் சீரம், ஆக்ஸ்போர்டு இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் சமீபத்தில் பேசியபோது “உலக ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க செய்ய உலக சுகாதார அமைப்பு கோவாக்ஸ் என்ற அமைப்பை தொடங்கியது.

அதன்படி உலகம் முழுவதும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் விதிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்காக வழங்கி வருகின்றன. ஆனால் சீரம் நிறுவனம் அவ்வாறு இதுவரை தடுப்பூசிகள் வழங்கவில்லை. தற்போது இந்தியாவில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் தடுப்பூசி தேவை அதிகம் உள்ளதால், இந்தியாவின் தேவைக்கு பிறகு மற்ற நாடுகளுக்கு சீரம் நிறுவனம் தடுப்பூசிகளை தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்