தேமுதிக தலைவர் அவ்வப்போது மருத்துவமனை சென்று உடல்நிலையை பரிசோதனை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென இன்று அதிகாலை 3 மணி அளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. மேலும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக கூறியுள்ளது.