யார் பாத்த வேலை இது? அமெரிக்க கலவரத்தில் இந்திய கொடி! – வைரலாகும் வீடியோ!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (13:27 IST)
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்களால் நடந்த கலவரத்தில் சிலர் இந்திய கொடியை ஏந்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், நடப்பு அதிபர் ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

இதனிடையே அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப் – ஜோ பிடன் ஆதரவாளர்கள் இடையே வன்முறையும் வெடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்கா நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலியான நிலையில் நெரிசலில் சிக்கி மேலும் மூவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் உருவம் கொண்ட கொடிகளுடன் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் குறித்த வீடியோக்களில் ஆங்காங்கே இந்திய கொடியும் தென்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் இந்திய கொடியை எடுத்து சென்றது ஏன் என தெரியாத நிலையில் இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்