ரத்தம் படிந்த வெள்ளை மாளிகை; உலக தலைவர்கள் கண்டனம்! – விரட்டியடிக்கப்படுவாரா ட்ரம்ப்?

வியாழன், 7 ஜனவரி 2021 (10:45 IST)
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்களால் வன்முறை வெடித்த சம்பவம் குறித்து உலக தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், நடப்பு அதிபர் ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

இதனிடையே அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப் – ஜோ பிடன் ஆதரவாளர்கள் இடையே வன்முறையும் வெடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்கா நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலியான நிலையில் நெரிசலில் சிக்கி மேலும் மூவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ என பல உலக தலைவர்கள் வருத்தங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்ரம்ப் தூண்டுதல் பெயரில் இந்த கலவரம் நடந்ததாக குற்றம் சாட்டப்படும் நிலையில் அதிபர் ட்ரம்ப் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்