ஜனநாயகத்தை சிதைப்பதை அனுமதிக்க முடியாது! – ட்ரம்ப்பை கண்டித்த மோடி

வியாழன், 7 ஜனவரி 2021 (09:56 IST)
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்களால் வன்முறை ஏற்பட்டது குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், நடப்பு அதிபர் ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

இதனிடையே அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப் – ஜோ பிடன் ஆதரவாளர்கள் இடையே வன்முறையும் வெடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்கா நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி “வாஷிங்டனில் நடைபெறும் வன்முறை தொடர்பான செய்திகள் வேதனை அளிக்கிறது. அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும். சட்டவிரோத போராட்டங்கள் மூலம் ஜனநாயகம் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்