நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

Prasanth Karthick

ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (10:43 IST)

சென்னை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்று சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றான அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அடுத்தடுத்து அதிமுக பிரமுகர்கள் பலரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சென்று சந்தித்து வந்தனர். தமிழக அரசியல் பிரச்சினைகளை கையாள பாஜக நிர்மலா சீதாராமனை நியமித்திருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ள நிர்மலா சீதாராமனை அதிமுக அதிருப்தி பிரமுகர் கே.சி.பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்தனர். அதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சீமான் நிதியமைச்சரை சந்தித்தது எதற்காக என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிகிறது. திமுக கூட்டணிக்கு எதிரான பலமான கூட்டணியை அமைக்க பாஜக முயன்று வருவதாக பேசிக்கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்