கடந்த சில நாட்களுக்கு முன்னால் டெல்லி சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிலையில், இன்று சென்னையில் மீண்டும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சார்பில் ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சி.வி.சண்முகம், கேபி முனுசாமி, வேலுமணி உள்ளிட்டோர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னை உள்ள தனியார் ஹோட்டலில் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாகவும், ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், இன்னும் சில நாட்களில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுக்கிடையே சந்திப்பு அடிக்கடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.