உக்ரனுக்கு உதவி செய்யும் அமெரிக்கா; ரஷியா குற்றச்சாட்டு

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (00:21 IST)
உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நடந்து வருகிறது.

ரஷியா தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்த நட்டிற்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுத, நிதி உதவிகள் செய்து வருகின்றது.

இந்த நிலையில்,  அதி  நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக, ரஷிய  வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைனுக்கு ராணுவத் தளவாடங்களும்,  நிதி உதவியுடன், ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் அமெரிக்காவும் இப்போரில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு அமெரிக்க செய்தித் தொடர்பாலர் ஜெனரல் பாட் ரைடர், உக்ரைன் நாட்டிற்கு நாங்கள் வழங்கும் உதவிகள் குறித்து, ரஷியாவின் விமர்சனம் ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

இதனால், ரஷியாவுக்கும் அமெரிக்காவும் மேலும் பகை மூள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்