ரஷ்ய ஜெட்டை வீழ்த்தியது உக்ரைன் அரசு!!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (11:42 IST)
கீவ் நகரின் டார்னிட்ஸ்கியில் ரஷ்யாவின் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. 

 
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்த ஒரு நாளுக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, இதுவரை 137 பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 316 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
 
மேலும் ரஷ்யாவின் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. கீவ் நகரின் டார்னிட்ஸ்கியில் ரஷ்யாவின் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்