ரஷ்யா குறித்து இந்தியாவோடு பேசினோம்… அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:12 IST)
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தி பல்வேறு இடங்களில் தாக்குதல் நடந்துவருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் உலக நாடுகள் போருக்கு எதிரான கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன. இந்த போருக்கு ரஷ்யாதான் காரணம் என்று அமெரிக்காவும், அமெரிக்காதான் காரணம் என்று ரஷ்யாவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தியா இதுவரை போரில் எந்த பக்க ஆதரவும் எடுக்கவில்லை.

ஆனால் நேற்று இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘நாங்கள் இது குறித்து இந்தியாவுடன் ஆலோசனையில் இருந்தோம். ஆனால் பேச்சுவார்த்தை முழுமையடையவில்லை’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்