நேற்றைய வீழ்ச்சிக்குப் பின் இன்று முன்னேற்றம் காணும் பங்குச் சந்தை!

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:57 IST)
ரஷ்ய உக்ரைன் போரால் இந்திய பங்குச்சந்தை நேற்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.

ரஷ்யா உக்ரைன் மீதான போரை தொடங்கி இருப்பது இந்தியாவுக்கு பெருத்த அடியாக உருவாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்து வருவதால் இந்தியாவில் விரைவில் பெட்ரோல் விலை 120 ரூபாய் வரை செல்ல் வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. அதனால் நேற்று கடுமையாக பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டது. நிஃப்டி 100 ல் உள்ள ஒரு நிறுவனம் கூட நேற்று லாபம் பார்க்கவில்லை.

இந்நிலையில் இன்று பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. தற்போது வரை நிஃப்டி 434 புள்ளிகளும், சென்செக்ஸ் 1342 புள்ளிகளும் உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்