உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவின் இந்த படையெடுப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்த்துள்ள சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்திருக்கும் நிலையில் ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் தொழில்துறை தலைவர்களோடு நேற்று ஆலொசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் உக்ரைன் மீதான படையெடுப்பு கட்டாயத்தின் பேரிலேயே எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கில் நடத்தவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த பொருளாதார தடையால் ஏற்படும் இழப்புகளை சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார்.