கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் - ரஷ்யா

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (13:31 IST)
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
 
இந்நிலையில் போர் காரணமாக உக்ரைன் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறும் நிலை உள்ளது. இதனிடையே ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை பெலாரசில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்க உள்ளது.
 
எனவே, போர் விமான தாக்குதல் எச்சரிக்கை நிறுத்தப்பட்டதுடன் ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்