வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

Mahendran

திங்கள், 7 ஏப்ரல் 2025 (14:53 IST)
வக்பு  சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதால், அம்பானியின் ₹15,000 கோடி வீட்டிற்கு ஆபத்தா? என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பையின் அமைந்துள்ள, ஆண்ட்லியா என்று அழைக்கப்படும் ₹15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் கட்டிடம் ஆன்மீக பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சொத்து குறித்து ஏற்கனவே பல ஆண்டுகளாக பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஆண்ட்லியா வீடு கட்டப்பட்ட இடத்தில் முகேஷ் அம்பானி 2010ஆம் ஆண்டில் 27 மாடிகள் கொண்ட வீடு கட்டியுள்ளார் எனவும், இந்த இடத்தை அம்பானிக்கு விற்றவர் கரீம் பாய் இப்ராஹிம் என்பவராகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த நிலம் வக்பு வாரியத்திற்கு தானமாக வழங்கப்பட்டது என்றும், ஆதரவற்றவர்களுக்கு இல்லம் கட்டவும, பள்ளி எழுப்பி மாணவர்களுக்கு கல்வி வழங்கவும் என்ற நோக்கத்தோடு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால் இந்த நிலத்தை முகேஷ் அம்பானி வாங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்ட திருத்தம் காரணமாக அம்பானியின் ₹15,000 கோடி வீட்டிற்கு ஆபத்து ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்