உக்ரைனில் சிக்கி கொண்ட தமிழ் நடிகை: வதந்தியால் ஏற்பட்ட பரபரப்பு!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (12:51 IST)
தமிழ் நடிகை ஒருவர் உக்ரைனில் சிக்கிக் கொண்டதாக ஏற்பட்ட வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பிறப்பு என்ற தமிழ் திரைப்படத்திலும், ஒரு சில மலையாள மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரியா மோகன்
 
 இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றதாகவும் அங்கு அவர் போரில் சிக்கிக் கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின 
 
ஆனால் இது குறித்து விளக்கமளித்த பிரியா மோகன் தாங்கள் உக்ரைனில் இருந்து திரும்பி விட்டதாகவும் உக்ரைனில் சிக்கிக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் தயவுசெய்து இதுமாதிரி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்