ப்ளூ டிக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் திடீர் முடிவு? – பயனாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (10:43 IST)
ட்விட்டரில் பணம் செலுத்தி பெறப்படும் ப்ளூ டிக்குகள் தவிர பிறவற்றை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் ட்விட்டர். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில் பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ப்ளூ டிக்குகளுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என ட்விட்டர் அறிவித்தது.

இந்நிலையில் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் நடைமுறைக்கு முன்னதாகவே ப்ளூ டிக்கை இலவசமாக பெற்றிருந்தவர்களின் ப்ளூ டிக்குகள் ஏப்ரல் 1 முதல் நீக்கப்பட உள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது. இனி ப்ளூ டிக் வேண்டுமென்றால் பழைய ப்ளூ டிக் பயனாளர்களும் மாதம் 8 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ட்விட்டர் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்