ட்விட்டர் பதிவுக்கான கேரக்டர்களின் எண்ணிக்கை 10,000: எலான் மஸ்க் திட்டம்..!

திங்கள், 6 மார்ச் 2023 (15:27 IST)
ட்விட்டரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் 140 கேரக்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 280 கேரக்டர்கள் அனுமதிக்கப்படுகின்றன. ட்விட்டரின் சிறப்பு அதில் குறுகிய கேரக்டர்கள் அனுமதிக்கப்படுவது தான் என்றும் அதனால் தான் இந்த தளத்தை அதிகமானோர் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் ட்விட்டரில் அதிக கேரக்டர்கள் அனுமதிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் டுவிட்டர் தற்போது எலான் மஸ்க் கைக்கு கைமாறி உள்ளது. 
 
இந்த நிலையில் ட்விட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் எலான் மஸ்க் அதிக கேரக்டர்களை அனுமதிக்கும் திட்டம் குறித்தும் ஆலோசனை செய்து வருகிறார். இந்த நிலையில் ட்விட்டர் பதிவுக்காக கேரக்டர்களின் எண்ணிக்கையை 10,000 என அதிகரிக்க உள்ளதாக எலான் மாஸ்க் அறிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் இதை ட்விட்டர் ப்ளூ பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் 10,000 கேரக்டர் அனுமதிக்கப்பட்டால் அதன் சிறப்பை இழந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்