வங்க கடலில் தோன்றிய புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில் கன மழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறி உள்ளதாக தகவல் வந்துள்ளது.
புயல் மட்டுமின்றி, மழை முன்னறிவிப்பிலும் சில மாற்றங்கள் இருந்ததாகவும், அதிக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட பகுதியில் லேசான மழை மட்டுமே பெய்ததாகவும் தகவல் வெளியானது. இதற்கு காரணம், கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் சில பகுதிகள் இலங்கை நிலப்பரப்பில் ஊடுருவியதால், தமிழகத்தில் செய்ய வேண்டிய மழை இலங்கை பகுதியில் பெய்து விட்டது. இதனால், வட இலங்கை பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல் வந்துள்ளது.
மேலும், அரபிக்கடலின் உயர் அழுத்தம், பசிபிக் கடலின் உயர் அழுத்தம், மேற்கத்திய தாழ்வு நிலை ஆகியவை காரணமாக புயல் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், மணிக்கு 13 கிலோமீட்டர் வரை நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நகராமல் நின்றதால் புயல் உருவாகவில்லை, மேலும் தமிழகத்திற்கு எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.