துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமானோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருக்கும் நிலையில் மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாகவும் இதனால் 8 மடங்கு உயர் பலியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
துருக்கி சிரியா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5000 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்ட கூடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
கடுமையான பனி உள்பட ஒருசில காரணங்களால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.