இந்தியா செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்.. துருக்கி நாட்டு தூதர் பேட்டி!
பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் உதவிக்கரம் நீட்டிய இந்தியாவை நாங்கள் மறக்க மாட்டோம் என துருக்கி தூதர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த தகவல் வெளியான ஒரு சில மணி நேரங்களில் இந்தியா உதவி கரம் நீட்டியது. இந்தியாவிலிருந்து இரண்டு குழுக்கள் புறப்பட்டு சென்றன என்பதும் அவர்களுடன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம் என்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1.40 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் துருக்கி நாட்டு தூதர் பிராட்ஸ் மால் தெரிவித்துள்ளார்
மேலும் 6000 கட்டிடங்கள் விழுந்துள்ளதாகவும் மூன்று விமான நிலையங்கள் சேதம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.