2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் 82 மாவட்டங்களுக்கு அமைப்பின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதை கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நியமனங்களில், அதிமுகவின் இளம் தலைமுறையினரை அடிப்படையாகக் கொண்டு, விளையாட்டு வீரர்களை அணியில் இணைத்து வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த நியமன பட்டியலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.
செங்கோட்டையன் மாவட்ட செயலாளர் ஆவார், அதனால் அவர் மாவட்ட பொறுப்பாளரின் பட்டியலில் இடம்பெறவில்லை என்று அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதேபோல், ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் பெயரும் பட்டியலில் இடம் பெறவில்லை.
கட்சி வளர்ச்சி மற்றும் பூத் கமிட்டி செயல்பாடுகளை முன்னெடுக்க, அதிமுகவில் மாவட்ட வாரியான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து செயல்பட்டு கட்சியின் வளர்ச்சியை மேம்படுத்தவேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.