இந்தியாவுக்கு வாங்களேன்! – சீன அதிபரை தொடர்ந்து ட்ரம்ப் வருகை!

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (11:57 IST)
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் சீன ஜின் பிங் இந்தியா வருகை புரிந்தார். அரசு முறையற்ற அந்த சந்திப்பில் பிரதமர் மோடி மற்றும் ஜின் பிங் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள், ஒப்பந்தங்கள் குறித்து பேசியிருந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபருக்கு போனில் பேசிய பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பதிலுக்கு அதிபர் ட்ரம்பும் இந்திய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அப்போது இந்தியாவுக்கு மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து ட்ரம்ப் இந்திய பயணத்துக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தேதி அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படாத நிலையில் அடுத்த மாதமான பிப்ரவரியில் அவர் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வரும் முன் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியா வந்து பாதுகாப்பு அம்சங்களை பார்வையிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான புதிய ஒப்பந்தங்கள் சில கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்