அதே போல் ஆஃப்கானிஸ்தானில் 18 பேர் பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளிலும் சாலைகளில் பனி அதிக அளவில் நிறைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரியவருகிறது. மேலும் பனிப்பொழிவால் குவாட்டா நகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.