குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா வழக்கு! – காம்ரேடுகளின் அடுத்த மூவ்!

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (11:30 IST)
இந்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா அரசு முதன்முதலாக வழக்கு தொடர்ந்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்று வருகின்றன. ஆறுக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்தை ஏற்க போவதில்லை என அறிவித்தன. ஆனால் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை நிராகரிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இல்லை என கூறிவிட்டது.

மத்திய அரசின் இந்த போக்கை எதிர்த்து கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் தற்போது குடியுரிமை சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல மாநில அரசுகள் போராட்டம் நடத்தினாலும், சட்டரீதியாக முதல் வழக்கை தொடுத்துள்ளது கேரள அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்