இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ட்ரம்ப், பதவி ஏற்க முன்னரே முக்கிய பதவிகளுக்கு சில நபர்களை நியமனம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவரை அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக ட்ரம்ப் நியமனம் செய்துள்ளதாக தகவல் வழியாக உள்ளது.
இந்த பதவி குறித்து ஸ்ரீராம் கிருஷ்ணன் கூறிய போது, "அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்," என்று தெரிவித்தார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே விவேக் ராமசாமி உள்பட ஒரு சிலர் அமெரிக்காவில் உள்ள முக்கிய பதவிகளை நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்ரீ ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.