அமெரிக்காவில் தேசிய அளவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட உள்ளதாகவும், இதையடுத்து புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுதான் அதிபராக பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்பின் முதல் நடவடிக்கை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன் என்றும், புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவேன் என்றும் கூறியிருந்தார். குறிப்பாக, மெக்சிகோ எல்லையை உறுதிப்படுத்துவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவர் வெற்றி பெற்று அதிபராக இருக்கும் நிலையில், அவரது முதல் நடவடிக்கையாக தேசிய அளவில் அவசர நிலை பிரகடனம் செய்வது, அதன்பின் புலம்பெயர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.