வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

Prasanth K

ஞாயிறு, 6 ஜூலை 2025 (18:36 IST)

உலக நாடுகள் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போர் நிகழ்ந்து வரும் நிலையில் இது மக்களிடையேயான சகோதரத்துவத்தை அழித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்துள்ளார்.

 

நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் “ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர்கள் உலகம் முழுவதும் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக போர் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலை உள்ளது. ட்ரோன்கள், ஏவுகணைகள் போரின் போக்கை மாற்றியுள்ளன.

 

இவை அனைத்திற்கும் மத்தியில் மனிதகுலம் காப்பாற்றப்படுவது மிகவும் கடினம், பெரும்பாலும் பொதுமக்கள் வாழிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இந்த பிரச்சினைகளை உலக அளவில் விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. இவை மெதுவாக அழிவுக்கு இட்டுச் செல்கின்றன. வல்லரசு நாடுகளின் சர்வாதிகாரத்தால் ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அன்பு ஆகியவை மறைந்து வருகின்றன” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்