எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

Prasanth Karthick
திங்கள், 23 டிசம்பர் 2024 (12:59 IST)

அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப், தனது நண்பர் எலான் மஸ்க் அதிபராக முடியுமா என்ற கேள்விக்கு அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார் டொனால்டு ட்ரம்ப். இந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப்க்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவர் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். இதற்காக எலான் மஸ்க்கிற்கு அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்பில் இடம் கொடுத்துள்ளார் ட்ரம்ப்.

 

இந்நிலையில் அமெரிக்க அதிபராக எலான் மஸ்க் வருவதற்கு எதிர்கால வாய்ப்புகள் உள்ளதா என டொனால்டு ட்ரம்ப்பிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ’இல்லை.. அது மட்டும் நடக்காது’ என கூறியுள்ளார். ஏன் என்றால் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி, இயற்கையாக அமெரிக்காவில் பிறந்த குடிமகன் ஒருவரே அமெரிக்காவின் ஜனாதிபதியாக முடியும். ஆனால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். அதனால் அவர் அமெரிக்க அதிபராக வாய்ப்பேயில்லை என்று பதில் அளித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்