காப்பி குடித்ததால் ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட ஜோடியினர்.. இத்தாலியில் நடந்த விசித்திர சம்பவம்

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (11:57 IST)
இத்தாலியில் பாலத்தின் படிகட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்த ஜோடியினரை நகரை விட்டு வெளியேற்றப்பட்ட விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

இத்தாலி நகரில் அமைந்துள்ள வெனிஸ் நகரம், பல குட்டி தீவுகளை கொண்ட நகரம் ஆகும். இங்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதும் போவதுமாக உள்ளனர். ஓர் ஆண்டுக்கு 3 கோடி சுற்றுலா பயணிகள் வெனிஸ் நகருக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த 35 வயது ஒத்த சுற்றலா பயணிகளான ஜோடியினர், வெனிஸ் நகரிலுள்ள ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்துக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த சிலர் பொது இடத்தில் இவ்வாறு நடந்துகொள்ளகூடாது என அந்த ஜோடியினரை கண்டித்துள்ளனர். ஆனால் அந்த ஜோடியினர் அதற்கு செவிசாய்க்கவில்லை. ஆதலால் வெனிஸ் நகரின் மேயர் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனை அடுத்து உடனே போலீஸார் அவர்களை பிடித்து 853 பவுண்ட் அபராதம் விதித்தனர். இது இந்திய மதிப்பு படி சுமார் ரூ.75 ஆயிரம் ஆகும். அத்துடன் அந்நாட்டை விட்டு அந்த ஜோடியினர் வெளியேறவேண்டும் எனவும் உத்தரவிட்டனர். வெறும் காபி போட்டு குடித்த காரணத்தால், ஜோடியினர் நகரை விட்டு வெளியேற்றப்பட்ட செய்தி, விசித்திர சம்பவமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்