நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

Siva

திங்கள், 28 ஜூலை 2025 (16:22 IST)
ஏமன் சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை விடுவிக்கக் கோரி, அவரது 13 வயது மகள் மிஷல், தந்தை டாமியுடன் ஏமன் பயணம் மேற்கொண்டுள்ளார். குளோபல் பீஸ் இனிஷியேடிவ் நிறுவனர் டாக்டர் கே.ஏ.பவுல் உடன் இணைந்து, தன் தாயின் விடுதலைக்காக ஏமன் அதிகாரிகளிடம் இந்த சிறுமி கருணை கோரி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா பல ஆண்டுகளாக ஏமன் சிறையில் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது மகள் அவரை பார்த்ததில்லை. மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மிஷல் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்: "அம்மா, நான் உங்களை நேசிக்கிறேன். தயவுசெய்து என் அம்மாவை வீட்டிற்குத் திரும்ப கொண்டுவர உதவுங்கள். நான் உங்களை பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன், அம்மா."
 
இதற்கிடையே, நிமிஷாவின் கணவர் டோமி தாமஸ் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்: "தயவுசெய்து என் மனைவி நிமிஷா பிரியாவை காப்பாற்றி, அவர் சொந்த ஊர் திரும்ப உதவ வேண்டும்."
 
மிஷல் மற்றும் அவரது தந்தை டாமியுடன் ஏமன் அதிகாரிகளை சந்தித்த கிறிஸ்தவ மத போதகர் டாக்டர் கே.ஏ.பவுல், ஏமன் அதிகாரிகளுக்கும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள தாலால் குடும்பத்திற்கும் தனது நன்றியை தெரிவித்தார். "நிமிஷாவின் ஒரே மகள் 10 ஆண்டுகளாக தன் தாயை பார்க்கவில்லை. மிஷல் இங்கு இருக்கிறார். தாலால் குடும்பத்திற்கு நன்றி கூற விரும்புகிறேன். நீங்கள் நிமிஷாவை விடுவித்தவுடன், நாளை அல்லது நாளை மறுநாள், நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்," என்று தெரிவித்துள்ளார்.
 
10 வயது மகளுக்காக நிமிஷா விடுதலை செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்