ஒரு காதல் ஜோடியின் கல்லறையை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது 4000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை அறிந்து வியப்பில் ஆழ்ந்தனர். முக்கியமாக, கண்டெடுக்கப்பட்ட இந்த கல்லறையில், நேருக்கு நேராக இருவரை முகத்தை பார்த்தவாறு புதைக்கப்பட்டுள்ளது அவர்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கஜகஸ்தான் நாட்டில், காரகண்டா மாகாணத்தில் புராதானமிக்க இடங்களில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். தற்போது,ஒரு காதல் ஜோடி புதைக்கப்பட்ட கல்லறை ஒன்றை தோண்டி, அதிலிருந்து இரு எலும்புக் கூடுகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
அதில், எலும்புக்கூடுகளுடன் ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் கிடைத்துள்ளன. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட 16, 17 வயதுடையவர்களின் கல்லறை இது என்றும், முகத்துக்கு முகம் நேராகப் புதைப்பட்ட இவர்கள் காதலர்களாக இருக்கலாம் என்று ஆராயச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் இன்னும் சில ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கிடைக்கலாம் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.