ஃபேஸ்புக்கை பின்னுக்கு தள்ளிய டிக்டாக்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (18:33 IST)
உலகின் நம்பர்-1 சமூக வலைதளம் பேஸ்புக் என்பதும் இந்த சமூக வலைதளத்திற்கு உலகம் முழுவதும் பில்லியன் கணக்கில் பயனாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பேஸ்புக் சமூக வலைதளத்தை அடித்துக்கொள்ள இன்னொரு சமூக தளம் வர முடியாது என்றே அனைவரும் கருதினர். இருப்பினும் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சமூகவலைதளத்தில் ஜாம்பவனாக இருந்து வந்த பேஸ்புக் நிறுவனத்தை டிக் டாக் திடீரென பின்னுக்கு தள்ளியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக டிக் டாக் உருவெடுத்து உள்ளது என கருத்துக் கணிப்பு ஒன்று கூறியுள்ளது
 
பேஸ்புக்கை அடுத்து தூக்கிவிட்ட டிக்டாக், இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் தடை செய்யப்பட்ட போதிலும் பேஸ்புக் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்