ரஷிய போரில் அமைதிக்கான ஒரே வழி i இதுதான் - இத்தாலி பிரதமர் மெலோனி

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (22:51 IST)
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் பாதுகாக்காக்க  அந்த நாட்டிற்கு உதவப் போவதாக இத்தாலிய பிரதமர் கூறியுள்ளார் 

உலகின் வல்லரசு நாடான ரஷியா, உக்ரைன் மீது ஏழரை மாதமாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுத்து, பொருளாதாரத் தடை விதித்தும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இதையடுத்து ஐ நாவின் எச்சரிக்கையும் ரஷியா காது கொடுத்துக் கேட்கவில்லை.  சமீபத்தில் உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை ரஷியா கைப்பற்றிய நிலையில் , இரு நாடுகள்  இடையே மோதல் முற்றி வருகிறது

இந்த நிலையில்,ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டி, உக்ரைனைப் பாதுக்காக்க அந்த நாட்டிற்கு உதவ வேண்டும் என்று இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்