இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்!

திங்கள், 26 செப்டம்பர் 2022 (17:41 IST)
இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்!
இத்தாலி நாட்டில் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்நாட்டின் பிரதமராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இத்தாலி நாட்டின் பொருளாதார நிலை மோசம் அடைந்ததை அடுத்து அந்நாட்டின் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி திடீரென பதவி விலகினார் 
 
இதனை அடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய நேற்று இத்தாலியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டின் வலதுசாரிக் கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜார்ஜியா மெலானி என்பவர் பிரதமராக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இதுவரை எண்ணப்பட்ட 63 சதவீத வாக்குகளில் இவரது கட்சி அதிக சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் இத்தாலி நாட்டின் பிரதமராக முதல்முறையாக ஒரு பெண் பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்