“என்னை பிடிக்காததால் ஆட்சியை மாற்ற சதி நடக்கிறது” – இம்ரான் கான்

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (00:08 IST)
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், நாளை காலை 10:30 மணிக்கு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
 
இந்நிலையில், சிறிது நேரத்திற்கு முன்பு பாகிஸ்தானின் பிடிவியில் நேர்காணலின்போது, பிரதமர் இம்ரான் கான் மீண்டும் அவருடைய ஆட்சியைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி நடப்பதாகவும் மக்கள் சுய மரியாதை மற்றும் நாட்டின் இறையாண்மையை மக்கள் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
“வெளியிலிருந்து நாட்டின் ஆட்சியை மாற்றுவதற்கான முயற்சி நடந்தது. அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதால், என்னை மாற்ற முடிவு செய்தார்கள்.
 
இது இம்ரான் கான் பற்றியது மட்டுமல்ல. ஒரு சமூகம் அதன் இறையாண்மையைப் பாதுகாக்கவில்லை என்றால், வேறு யார் பாதுகாப்பது?” என்று கூறியுள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்