இம்ரான்கான் ராஜினாமா செய்வதுதான் அவருக்கு கவுரவம் - எதிர்க்கட்சிகள் பரிந்துரை
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (22:01 IST)
இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதுதான் அவருக்கு கவுரவம் என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த முக்கிய அரசு கட்சியின் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது.
இந்த நிலையில் இன்று இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஏப்ரல் மூன்றாம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் பிரதமராக இறுதிவரை போராடுவேன் என்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் மேலும் கூறியபோது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் பாகிஸ்தானின் தலையெழுத்து வரும் ஞாயிறு அன்று நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதுதான் அவருக்கு கவுரவம் என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியுள்ளதாவது: இம்ரான் கானுக்கு இப்போது பாதுகாப்பான பாதையில்லை. அவ்ர் ராஜினாமா செய்வது மட்டுமே கவுரவமாக இருக்கும். இம்ரான் ராஜினாமா செய்வதை நான் பரிந்துரைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.