நிருபரை துப்பாக்கியால் மிரட்டி செல்போன் பறித்த திருடன் !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (23:07 IST)
ரஜினி பட டயலாக் போன்று திருடர்கள் எப்போது வருவார்கள் எப்படி வருவார்கள் எப்படி வருவார்கள் என யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் வருவார்கள் என்பது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஈகுவடார் நாட்டில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த ஒரு நிருபரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஈகுவடார் நாட்டில் கயாகுயில் என்ற நகரில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதுகுறித்து நிருபர் தகவல் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய ஒரு இளைஞர் கையில் துப்பாக்கியுடன் நெருங்கி அவரை மிரட்டி கையிலிருந்த செல்போனை பறித்துச் சென்றார். இந்தச் சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்