இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள ஹிப்ஹாப் ஆதி!

வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (22:17 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆதி. இவர் ஆம்பள என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.

இதையடுத்து, மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இதையடுத்து,அவ்வப்போது, முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில்,  இவர் தற்போது, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் அன்பறிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அஷ்வின் ராம் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் கோயமுத்தூர் பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைக் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகிறது. அதன்படி, ஹிப்ஹாப் ஆதி இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவருவதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்